My Coconutty Wisdom – Episode 6:
A Podcast by KURINZI FOODSTYLE
தென்னையை பற்றி எனக்கு தெரிந்தவை!
Ms. Sanjuktha, the Proprietor of @tycoonwoodcabins from Kodaikanal, bringing us her coconutty wisdom in her calming voice. In this podcast, she takes us on a journey through her childhood, college days, her IT career, and her path to entrepreneurship. She shares how coconut oil has been a remedy for various ailments like muscle cramps, menstrual cramps, stomach aches, and body heat. Ms. Sanjuktha also sheds light on the benefits of coconut oil for hair care, cracked feet, and swollen gums. Moreover, she underscores the lifesaving properties of coconut water during dehydration. Let’s sit back and soak in Ms. Sanjuktha’s insightful coconutty wisdom!
Join us on a delightful journey exploring coconut-based products, from cherished childhood memories to contemporary experiences.
In each episode, special guests share childhood anecdotes, adventures, happiest moments, favorite songs, and more, culminating in the revelation of their all-time favorite dish crafted with coconut oil.
These heartwarming stories are sourced from our valued customers, friends, and family. We guarantee it’s a series that celebrates the unique wisdom of everyday people.
Podcast Transcript in English
Hey everyone, and welcome to Kurinzi Foodstyle, the podcast about health-centred living. I’m here to share the latest from Kurinzi VCO – “My Coconutty Wisdom” Episode 6, a special initiative from the Kurinzi team.
In this series, we’re diving into the world of coconut-based products, from nostalgic tales to today’s experiences. These stories come straight from our beloved friends, family, and customers, promising us a delightful and eye-opening series.
Today, we have Ms. Sanjuktha, to share her coconutty wisdom, and I’m Nishi Andal reading it for you!
Hello everyone, I am Sanjuktha talking to you. I studied Computer Applications at Madurai Lady Doak College, followed by a PG in Information Technology and Management at Madurai Kamaraj University. The days I spent in college were truly special. I often find myself longing for those carefree moments and wondering if they’ll ever come back. I miss my friends dearly.
After a decade of working in the IT industry, I decided to pursue my passion for business. I’ve had that interest ever since I was studying. And at one point, my dream came true – on June 14th, 2013, when I ventured into the fashion industry and started my own business.
Representing the hospitality industry, I now own a resort.
Apart from my resort venture, if you consider my interests, I’m an avid traveller. I have visited many places and I love beaches compared to mountains.
I am here to speak on the podcast “my’ Coconutty Wisdom” thanks to my friend Prithivi for giving me this opportunity.
When I reflect on it, one of the things that brings me the most joy is the coconut tree. When we were young, we used to say that there were two big coconut trees in front of our house and that was the sign of our house. Those trees are the same age as me and I’ve been seeing them for as long as I remember.
Coconuts have been a part of my life since I was born, and just thinking about them brings me happiness. I found great joy in tending to the trees and the surrounding flower garden. Each tree yields approximately 200 coconuts.
During school holidays, our cousins from the city would often come to visit our home in Thenkarai, a village situated in Periyakulam. Our village is renowned for its peaceful ambiance, with the Varaha River flowing through it, never drying up.
It’s famous for its abundant coconut groves and flourishing mango orchards. In our village, coconut groves are everywhere, so coconut is a big part of our lives. We use it in all kinds of cooking – like coconut milk rice, coconut sweets, and more. You won’t find a sweet dish here without coconut in it.
I’ll always remember the days we spent playing with our cousins in my uncle’s coconut grove. We’d eat there, splash around in the pond, and have a blast. After playing and taking a dip in the chilly water, we’d enjoy some coconut water before diving into our next adventure. Surprisingly, we never fell ill or caught a cold there. Those were truly wonderful times.
Then when I was a 9th and 10th student, I would get muscle cramps, stomach aches, and my body would be very hot. So, we used to soak coconut water and fenugreek and eat it. Even though it doesn’t taste great, we would drink it like medicine. It has incredible medicinal properties.
You won’t believe it, but all our muscle cramps would be cured almost instantly, allowing us to go to school without any discomfort.
And then, after applying coconut oil to my hair and styling it with crossandra flowers, I went to school. My younger sister and I would stay at home and we would fight a lot, for that our father would say, “பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீர்”, which translates to, “If you give birth to a child it, it will bring tears, but if you give birth to a coconut tree, it will bring sweetwater”
It’s really funny, but it’s true. And that’s what I say to my kids too.
Coconut contains antioxidants and when eaten, it lowers cholesterol and regulates sugar levels. It has a lot of amino acids, which is very good for metabolism. I drink coconut first thing in the morning on an empty stomach and then half an hour later I drink tea.
Back when I worked in the fashion industry, some customers would experience a burning sensation even after removing all their makeup. Our go-to recommendation was always to apply coconut oil in such cases.
Some of our customers may develop blisters after hair straightening. In such instances, we advise them to apply coconut milk to the scalp, as it’s the best remedy.
As we’re all aware, coconut oil is the ultimate moisturiser. For any skin conditions, rashes, or itches, I always opt for coconut oil. When we visit our resort in Kodaikanal, the cold weather tends to dry out our hands and legs. In such cases, we apply coconut oil, and as always, it works wonders.
Similarly, for cracked heels, I apply coconut oil generously before bedtime and wear socks overnight.
Once, I had terrible tooth pain because my gums were swollen. It hurt so much that my head, eyes, and nose all started to ache. The doctor gave me strong medicine, but it didn’t help. Instead, my stomach started hurting too, and I couldn’t eat or even swallow my spit properly.
I decided to try something at home. I started massaging coconut oil onto my gums. Amazingly, within just two days, the swelling went down, and the pain got better. I was able to eat. I kept massaging my gums with coconut oil for about a week, and soon enough, my gums were completely better.
From my experience, I can tell you that coconut oil is amazing for healing swollen gums. It worked wonders for me, and I’m sure it can help others too!
As a business owner, I’ve had many ups and downs in my life. Running a business isn’t a joke, you have to be so committed and you have to balance between profits and expenses. So it’s not as easy as it looks. At that time I would compare myself to a coconut. If you take a coconut shell, breaking it is not easy, it will be very difficult. No matter how delicious or sweet the inside is, it is tough on the outside. I will be just like that.
I have one thing to say to every woman who is listening to this – Be financially independent, you will only get it when you earn yourself and fulfil your own needs.
Another important thing is ‘self-love’, whoever you are, love yourself. Look at yourself in the mirror and say affirmations like “You’re so beautiful, you have a lot of talent, and you can achieve anything”.
Do this every day and you will see a difference.
As mentioned before, I used to travel quite often to beaches, particularly when exploring stunning beach getaways like Thailand, Bali, Seychelles, Mauritius, and the Maldives. Island hopping is a must-do activity in these places, often involving travelling on speedboats or cruises. However, with all the fun in the sun comes the risk of getting dehydrated and sunburnt, especially given the scorching weather and salty breeze..
That’s where coconut water comes in. It’s nature’s electrolyte-packed gift to keep us hydrated and feeling refreshed. Whether it’s replenishing lost fluids after a day under the sun or just quenching your thirst, coconut water has got your back. Trust me, when the sun’s beating down and you’re feeling parched, there’s nothing quite like sipping on some pure coconut water to revive your spirits and keep you going.
Similarly, while travelling, some people may experience food allergies. In such situations, I always turn to coconut water for its soothing and calming properties. I recommend making coconut water a part of your daily routine. It helps your body adjust to different foods, keeping you feeling refreshed, energized, and at peace throughout the day.
So my dear friends, I wish you all the best, especially Kurinzi team, and my friend Prithivi. Love you bye!
With Love,
Sanjuktha
From Kodaikanal
A huge shoutout to Ms. Sanjuktha for this lovely sharing.
If you enjoyed this episode, drop your thoughts in the comments. Give us a thumbs up and share it with your friends – it could be incredibly helpful for them and don’t forget to bookmark it for later. Stay tuned for more exciting episodes by hitting that follow button.
Feeling inspired to share your coconutty wisdom? Just say yes in the comments and we’ll slide into your dms.
Interested in trying Kurinzi Foodstyle’s cold-pressed virgin coconut oil? Head to kurinzi.com to place your order.
Thanks a lot for tuning in to Kurinzi Foodstyle’s “my’ Coconutty Wisdom”, let’s catch up on our next episode and until then, have a great week!
Thank you!
View this post on Instagram
எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் சாஞ்சுக்கத்தா பேசுறேன். நான் மதுரை லேடி டோக் கல்லுரியில் கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன் படிச்சேன்.பின்பு PG (Information Technology and Management) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
என்ன பொறுத்தவரைக்கும் என்னோட மறக்கமுடியாத நாட்கள் என்று சொல்லனும்னா அது நான் கல்லூரில படுச்சதுதான். அது போல இன்பமான வெகுளித்தனமான நாட்கள் திரும்பி வருமானு எனக்கு தெரியல, நான் அதிகமா Miss பன்றேன் அந்த நாட்களை.
அப்பறம் என்னோட எல்லா நண்பர்களையும் Miss பன்றேன்.
நான் IT கம்பெனில என்னோட வேலைய ஆரம்பிச்சேன் அதுல எனக்கு பத்து வருடம் அனுபவம் இருக்கு.அப்பறம் நான் என் பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன், நான் காலூர்ல படிக்கும்போது இருந்தே Businssல் எனக்கு ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் எனக்கு ஒரு நாள் நிறைவேறியது, 2013 June 14th, Fashion industryல நான் Business ஆரம்பிச்சுட்டேன்.
இப்ப நான் சொந்தமா ஒரு ரிசார்ட் வச்சுருக்கேன், இதை தவிர என்னோட இண்டெரெஸ்ட் என்னனு பாத்தீங்கன்னா, ட்ராவலிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் நிறைய இடம் ட்ராவல் பன்னிட்டு வந்துருக்கேன், மலைப்பகுதி விட கடற்கரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் இப்ப பேச வந்திருக்கிறது podcast “Coconutty Wisdom” இந்த வாய்ப்பு என் தோழி Prithivi எனக்கு குடுத்தாங்க ரொம்ப நன்றி.
யோசிச்சுப்பார்க்கும்போதே ரொம்ப சந்தோஷமான விஷயம் என்னனா தென்னை மரம், தேங்காய் இது நான் பிறந்ததுல இருந்தே என் கூட வந்துட்டு இருக்கு அதை பத்தி பேசனும்னு நினைக்கும் போதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.
நாங்க சின்ன வயசுல எங்க வீட்ட அடையாளம் சொல்லனும்னா எங்க வீட்டுக்கு முன்னாடி இரண்டு பெரிய தென்னை மரம் இருக்கு அதுதான் எங்க வீட்டுக்கு அடையாளம்னு சொல்லுவோம்.
அந்த தென்னை மரத்துக்கு என் வயசு இருக்கும், நான் பெறந்ததுல இருந்தே அதை பார்க்குறேன் எனக்கு ரொம்ப இஷ்டமானது ஏனா அந்த இரண்டு மரமும் எப்படி சொல்றது அது நமக்கு நிறைய கத்துக்குடுக்கும், nurturing, caring, நாங்க தண்ணி ஊத்துறது அதை சுத்தி நாங்க செடி வச்சுருப்போம்.
இப்பவும் அந்த தென்னை மரங்கள் ஒரு வெட்டுக்கு 200 காய் கொடுக்கும்.
அப்பறம் பாத்தீங்கன்னா என் கசின்ஸ் எல்லாம் விடுமுறைக்கு எங்க வீட்டுக்கு வருவாங்க, அவுங்க எல்லாம் Cityல இருப்பாங்க நாங்க எல்லாம் இங்க தென்கரை பெருங்குளம்ல இருந்தோம், எங்க ஊர்ல வற்றாத ஜீவ நதி இருக்கு வராஹ நதி, எங்க ஊர்ல ரொம்ப Famous வந்து தேங்காயும் மாங்காயும்தான் எல்லாரும் தென்னந்தோப்பு, மாந்தோப்பு வச்சிருப்பாங்க, அதுனால எங்க ஊர்ல தேங்காய் சம்மந்தமான விஷயம் எப்பவும் இருக்கும், எந்த ஒரு சமையல் நாளும் தேங்காய் போட்டு தா செய்வாங்க தேங்காய் போட்ட பொறியல், தேங்காய் பால் சாதம், தேங்காய் பர்பி, எந்த ஸ்வீட் இருந்தாலும் தேங்காய் இல்லாம இருக்காது.
நாங்க எங்க கசின்ஸ் ஓட போயி எங்க மாமா தென்னந்தோப்புல விளையாண்ட காலம் மறக்க முடியாதது. அதுவும் நாங்க ரொம்ப சின்ன குழந்தைகளா இருக்கும்போதே அங்க போயி விளையாடுவோம், அங்கேயே சாப்பிடுவோம் அங்க ஒரு கிணறு இருக்கு அதுல குதுச்சு நீச்சல் அடிப்போம், குளிச்சு முடுச்சுட்டு வந்து இளநீர் குடிப்போம் அனா எப்பவும் எங்களுக்கு ஒரு காய்ச்சலோ சளியோ வந்ததா நியாபகம் இல்லை.
அப்பறம் பெரிய பொண்ணானதுக்கப்புறம் ஒரு 9th,10th படிக்கும் போது எனக்கு தசைப்பிடிப்பு வரும், வயிறு வலி வரும், உடம்பு ரொம்ப சூடா இருக்கும் அதுக்கு நாங்க தேங்காய் தண்ணி ஓட வெந்தயத்தை ஊற வச்சு குடிப்போம். வெந்தயமே கசக்கும், அதுவும் தேங்காய் தண்ணில ஊற வச்சா அதோட Tasteஏ போயிடும். அதோட சுவை எல்லாம் மாறிடும் இருந்தாலும் நாங்க மருந்து போல அந்த தண்ணிய குடுச்சுட்டு வெந்தயத்தையும் சாப்பிட்டுருவோம். அது ரொம்ப மருத்துவ குணம் கொண்டது, நீங்க நம்பவே மாட்டீங்க தசைப்பிடிப்பு எல்லாம் உடனே சரி ஆயிடும்.
அப்பறமா தான் நம்ம Normalஅ Schoolகே போக முடியும், அந்த அளவுக்கு நமக்கு வலி போயிரும் தேங்காய் தண்ணிய வெந்தயத்துல ஊரவச்சு குடிச்சா.
அப்பறம் தலைக்கு தேங்காய் என்னை நல்லா தேச்சு வாரி சீவி கனகாம்பரம் பூ வச்சுட்டுதான் நான் Schoolகே போவேன்.
நானும் என் தங்கச்சியும் தான் வீட்ல இருப்போம் எங்க இரண்டு பேருக்கும் சண்டை ரொம்ப வரும் அப்ப எங்க அப்பா சொல்லுவாங்க “பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீர்” ரொம்ப சிரிப்பா இருகுல, ஆனா அது உண்மை நான் ஏன் குழந்தைகளுக்கு இப்ப சொல்றேன்,
அப்பறம் உங்களுக்கே தெரியும் தேங்காய்ல Antioxidant இருக்கு அத சாப்பிடும்போது cholesterol கொறையுது சக்கரை அளவு சீராகுது. அப்பறம் இதுல amino acids நிறையா உள்ளது, அப்பறம் metabolismகு ரொம்ப நல்லது, நன் தினமும் காலை வெறும் வயித்துல முதல்ல தேங்காய் எண்ணையை தான் குடிப்பேன் அப்பறம் அரை மணி நேரத்துக்கு அப்பறம் தான் டீ குடிப்பேன்.
அதேபோல இதுக்கு முன்னாடி நான் Fashion Industryல இருக்கும் போது மேக்கப் எல்லாம் எடுத்தது பின்னாடி கூட அந்த Skin எல்லாம் எரியுற மாறி இருக்கும் அப்ப நாங்க தேங்காய் எண்ணெயை தான் தேய்க்க சொல்லுவோம். அதே போல Hair Straightening செய்யுறவங்களுக்கு சில நேரம் தலைல கொப்பளம் மாறி வரும் அப்ப தலைக்கு தேங்காய் பால் வச்சுதான் தேய்க்க சொல்லுவோம் அந்த கொப்பளம் எல்லாம் போயிரும்.
தேங்காய் எண்ணெய் ஒரு Excellent Moisturizer, நம்ம எல்லாருக்குமே தெரியும். என்னோட Kodaikanal Resort க்கு போனோம்னா கை கால் எல்லாம் ஒரு மாறி வரவரனு இருக்கும் – அந்த Cold Climate’க்கு அப்ப நாங்க தேங்காய் எண்ணெய் தான் தேய்ப்போம், நம்ப சருமத்துக்கு ரொம்ப நல்லது.
அதே மாதிரி கால்ல பித்தவெடிப்பு இருக்கும்போது அதை சுத்தி நல்ல தேங்காய் எண்ணெய் தேச்சு Socks போட்டுட்டு தான் தூங்குவேன்.
ஒரு நாள் எனக்கு தாங்கமுடியாத அளவுக்கு பல் வலி வந்துச்சு Inflammationனா என்னானு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் ஒரு மாரி பல்லு, எகிறு எல்லாம் வீங்கிடும், வலி ரொம்ப இருக்கும். Generalஆ பல்லு வலி வந்தாவே கண்ணு, மூக்கு, தலை எல்லாம் வலிக்க ஆரம்பிச்சுரும். அந்த நேரத்துல Antibiotic குடுக்குறாங்க Heavy Dosageஆ இருக்கு. வலியும் போக மாட்டேங்குது, வயிறும் வலிக்குது, என்னடா பண்றதுன்னு தெரியல. எச்சிய முழுங்க முடியல, சாப்பிட முடியல, ஒன்னும் முடியல, ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தப்ப சரி ஒரு Home Remedyயா இருக்குமேன்ட்டு நான் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் யை எடுத்து அந்த வீக்கத்துமேல வச்சு மெதுவா Massage பண்ணி விட்டேன், நம்பவே முடியல ரெண்டே நாள்ல என்னால நிம்மதியா சாப்பிட முடிஞ்சது.
தொடர்ந்து ஒரு வாரம் – 10 நாள் வச்சு இருந்திருப்பேன் totalஆ அந்த வீக்கம் போயி ரொம்ப Normal ஆகிடுச்சு. ஈறு வீக்கம், எகிறு வலி, பல் வலிக்கு என்னோட Experienceல சொல்றேன் தேங்காய் எண்ணெய் is amazing. தேங்காய் எண்ணெய் மாதிரி ஒரு Healing Agent வேற எதுவுமே கிடையாது.
நான் பிசினஸ் பண்ணும்போது நிறையா ஏற்றம் இரக்கம் இருந்துச்சு பிசினஸ் பண்றது அவள சுலபம் இல்லை, ரொம்ப கவனமா இருக்கனும், லாபம் நஷ்டம் இரண்டும் இருக்கும், வெளிய தெரியிற மாறி சுலபம் கிடையாது ஒவ்வொரு நாளும் செத்து செத்துபுலைக்கணும்!
நம்ப ஒரு பிசினஸ் நடத்தும் போது எவ்வளவு Toughஆ, எவ்வளவு Strongஆ எவ்வளவு Energeticஆ, நம்ம Mind, Body & Soulஅ வச்சுஇருக்கணும் அப்படிங்கிறத நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது, ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.
அந்தமாரியான நேரத்துல நான் என்னையா ஒரு தேங்காய் உடன் தான் ஒப்பிட்டு பார்ப்பேன்
ஒரு தேங்காய் ஓட எடுத்துகிட்டீங்கன்னா உடைக்குறது அவ்வளவு சுலபம் கிடையாது, கடினமா இருக்கும். உள்ள எவ்வளவு தான் சுவையா இனிப்பா இருந்தாலும் அதோட வெளி தோற்றம் கடினமா இருக்கும், நான் அந்த மாறித்தான் இருப்பேன்.
இதை கேட்டுகிட்டு இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்றது ஒன்னுதான், பைனான்சியல்’ஆ யாரையும் சார்ந்து இருக்க கூடாது, நான் சொல்றதோட அர்த்தம் உங்களோட தேவைகளை நீங்களே சம்பாதிச்சு பூர்த்தி பண்ணும் போது தான் தெரியும்!
இன்னும் முக்கியமானது “self love” எல்லாரும் “self love” பண்ணுங்க, அது நீங்க பெண் ஆக இருந்தாலும் இல்லை ஆண் அகா இருந்தாலும் சரி “self love” பண்ணுங்க.
“self love” என்னனா நீங்களே உங்கள கண்ணாடில பார்த்து, நீ ரொம்ப அழகா இருக்க, உனக்கு நிறையா திறமை இருக்கு, உன்னால எதனாலும் சாதிக்க முடியும் அப்புடின்னு நீங்களே உங்கள பார்த்து தினமும் சொல்லணும்.
இப்படி நீங்க உங்களை சொல்லும்போது உங்களுக்குள்ள ஒரு மாற்றம் வரும், தினமும் காலைல எழுந்ததும் இன்னைக்கு நாள் நமக்கு நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம் வரும் அது உங்களை அடுத்த கட்டத்துக்கு போக உதவி செய்யும்.
Last முக்கியமான ஒண்ணு, இளநீர் ஒரு excellent electrolyte, நான் நெறைய Beach, Islandனு Travel பண்ணுவேன் அப்ப Island Hopping நெறைய இருக்கும். Thailand, Bali, Seychelles, Mauritius, Maldives இங்க எல்லாம் Island Hopping நெறைய இருக்கும். அப்ப நம்ம நெறைய speed boat, crusisesல தான் travel பண்ணுவோம். அங்க இருக்குற Climateக்கு அந்த Heatக்கு நம்ம Skin எல்லாம் ரொம்ப Tan ஆகிடும், அந்த வெயிலுக்கு ரொம்ப Dehydrate ஆகிடுவோம். அந்த மாறி நேரத்துல நீங்க இளநீர் தான் குடிக்கனும்.
அதே மாதிரி, Travel பண்ணும் போது சில பேருக்கு Food Allergy வரலாம். அந்த மாதிரி நேரத்துலயும் இளநீர் தான் Best. Daily இளநீர் குடிக்கிறது நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உங்களை நாள் முழுவதும் Freshஆ, Energeticஆ, Peacefulஆ வைத்திருக்கும்.
My dear friends, I wish you all the best.Especially Kurinzi Team, I wish you all the best. My Prithivi, all the best for you dear. Love you, bye.
Disclaimer:
Our primary objective is to provide education and information rather than solely promote our products. We do not provide medical advice or recommend alternative healthcare solutions. Any opinions, suggestions, experiences, or mentions of other brands shared by guests are their own. For personalized recommendations concerning your health or diet, please consult a qualified healthcare professional.
Posted on: Instagram | Facebook | Twitter – X | Pinterest | Threads
You May Be Also Interested in
My Coconutty Wisdom – Episode 5: A Podcast by KURINZI FOODSTYLE
My Coconutty Wisdom – Episode 4: A Podcast by KURINZI FOODSTYLE
Organic vs. Chemical Farming for Virgin Coconut Oil Production